தாய்மொழியை மேம்படுத்தும் புதிய காணொளித் தொடர்

தாய்மொழியை மேம்படுத்தும் புதிய காணொளித் தொடர்

1 mins read

தாய்மொழிகளின் முக்கியத் துவத்தை மாணவர்களுக்கு வலியுறுத்த புதிய காணொளித் தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் காணொளிகளை லீ குவான் இயூ இருமொழிக் கல்வி நிதி, நேற்று நியூ டவுன் உயர்நிலைப்பள்ளியில் அறிமுகம் செய்துவைத்தது. தாய்மொழியைக் கற்கும் அனுபவம் குறித்து கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங், சிங்கப்பூர் பிரபலங்களான ஷபிர் தபாரே ஆலம், ஒலிவியா ஓங், தௌஃபிக் பதிசா ஆகியோரின் பகிர்வுகளும் காணொளித் தொடரில் இடம் பெற்றுள்ளன.

தாய்மொழிக் கற்றல் வழியாக அதன் அருமை பெருமை களை உணர்ந்ததாக அவர்கள் காணொளியில் குறிப்பிட்டுள் ளனர். அதுமட்டுமல்லாது, கருத்து பரிமாற்றத்துக்குத் தாய்மொழி ஒரு முக்கிய கருவியாகத் திகழ்வதாக அவர்கள் கூறினர். வெவ்வேறு தலைமுறை யினருக்கு இடையே சுமூகமான உறவும் தடையற்ற தொடர்பும் மலர, தாய்மொழி அவசியம் எனும் கருத்தைக் காணொளித் தொடர் மாணவர்களிடம் முன்வைத்துள்ளது. அறிமுக விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் இங் சீ மெங், தாய்மொழிக் கல்வி தேசிய அடையாளத்தின் முக்கியமான பகுதி என்பதை வலியுறுத்தினார்.