சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த போதைப்பொருள் ஆய்வுக் கூடத்தில் மத்திய போதைப்பொ ருள் ஒழிப்புப் பிரிவு, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சுகா தார அறிவியல் ஆணையம் ஆகிய அமைப்புகளின் அதிகாரி கள் சோதனை நடத்தி போதைப் பொருள் தயாரிப்பு நடந்து வந்த தைக் கண்டுபிடித்துள்ளனர். சோதனையின்போது இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த மாதம் 16ஆம் தேதி யீஷூன் இன்டஸ்டிரியல் ஸ்திரீட் 11ல் உள்ள தொழிலியல் கட்ட டத்தில் நடந்த சோதனையில் 2.6 கிலோகிராம் கெனபிஸ் போதைப்பொருளும் அடையாளம் தெரியாத 500 கிராம் மாவு வகை யும் கைப்பற்றப்பட்டது. அண் மைய ஆண்டுகளில் போதைப் பொருள் தயாரிப்பு சம்பவம் சிங்கப்பூரில் நடக்கவில்லை என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பேச்சாளர் கூறியுள்ளார்.
உள்ளூரில் போதைப்பொருள் தயாரிப்பு கண்டுபிடிப்பு
1 mins read

