சக வழக்கறிஞரைத் தாக்கிய எம். ரவிக்கு 18 மாதக் கட்டாய மனநல சிகிச்சை

1 mins read

சக வழக்கறிஞரும் எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான ஜெனட் சோங் அருள்தாஸை சென்ற ஆண்டு தாக்கிய குற்றத்திற்காக 48 வயது வழக்கறிஞர் எம். ரவிக்கு நேற்று 18 மாதக் கட்டாய மனநல சிகிச்சை விதிக்கப்பட்டது. மனநல கோளாறு இருப்பதாக 2006ஆம் ஆண்டு மருத்துவர் களால் அறிவிக்கப்பட்ட எம். ரவி, சிறைக் காலத்திற்குப் பதிலாக மனநலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக கட்டாய சிகிச் சையை மேற்கொள்வார். சிகிச்சை பெற மறுப்பு தெரி வித்தாலோ மீண்டும் குற்றம் புரிந் தாலோ இந்த ஆணை மீட்டுக் கொள்ளப்படும்.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'தி அடெல்ஃபி' கட்டடத் தின் 11வது மாடியில் திருமதி ஜெனட் சோங் அருள்தாஸை அடித்தது மட்டுமல்லாமல் இன் னொரு வழக்கறிஞர் 42 வயது திரு நகூர்ஷா அப்துல் காதிருக்குப் பலவந்தமாக காயம் ஏற்படுத்தி யதை சென்ற நவம்பர் மாதம் ரவி ஒப்புக்கொண்டார். பீப்பள்ஸ் பார்க் செண்டரின் ஐந்தாவது மாடியில் உள்ள யூஜின் துரைசிங்கம் சட்ட நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி சட்டவிரோதமாக நுழைந்த குற்றத்தையும் அவர் ஒப்புக் கொண்டார். அந்த நிறுவனம் ரவியை 2016ஆம் ஆண்டு இறுதி யில் வேலைக்கு அமர்த்தியிருந்தது. 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இரண்டு ஆண்டு களுக்கு வழக்காட ரவிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.