அட்மிரல்டியில் உள்ள சைக்கிள் ஓட்டிகள் பாதுகாப்பாகவும் வானி லையின் பாதிப்பு இல்லாமலும் தங்கள் சைக்கிள்களை நிறுத்தும் வசதி அறிமுகம் கண்டுள்ளது. சிங்கப்பூரில் முதல் முறையாக $4.7 மில்லியன் செலவில் கீழ்த் தளத்தில் தானியங்கி சைக்கிள் நிறுத்தும் செயல்முறை நேற்று திறக்கப்பட்டுள்ளது. 'செக்யூர்மைபைக்' எனும் செயல்முறை அட்மிரல்டி எம்ஆர்டி நிலையத்திற்கு அருகிலுள்ள கம் போங் அட்மிரல்டி ஒருங்கிணைந்த மேம்பாட்டில் அமைக்கப்பட்டுள் ளது.
10 மீட்டர் ஆழமுள்ள அந்த இடத்தில் ஏழு தளங்களில் மொத் தம் 500 சைக்கிள்களை நிறுத்த முடியும். சோதனை காலமாக இம்மாதம் 31ஆம் தேதி வரை அங்கு இலவ சமாக சைக்கிள்களை நிறுத்தலாம். பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை பல முறை பயன்படுத்தி மாதக் கட்டணமாக $22 அல்லது ஒரு மணி நேரத்திற்கு 25 காசுகள் என்று கட்டணம் செலுத்தலாம்.
தானியங்கி சைக்கிள் நிறுத்தும் முறையைப் பயன்படுத்துவது பற்றி நிலப் போக்குவரத்து ஆணைய ஊழியர் ஒருவர் செய்து காட்டுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

