விலையை முன்கூட்டியே நிர்ணயித்த நிறுவனங்களுக்கு $19.5மி அபராதம்

விலையை முன்கூட்டியே நிர்ணயித்த நிறுவனங்களுக்கு $19.5மி அபராதம்

1 mins read
ceb63323-989c-4086-bb32-2eaf81d76016
-

கூட்டாகச் சேர்ந்து விலையை முன் கூட்டியே நிர்ணயித்த நடவ டிக்கையுடன் மற்ற சில கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட ஐந்து மின்னணுவியல் நிறுவனங்க ளுக்கு சிங்கப்பூர் வணிகப் போட் டித்தன்மை ஆணையம் மொத்தம் $19.5 மில்லியன் அபராதம் விதித் துள்ளது. ஆணையம் இதுவரை விதித்த அபராதங்களில் இதுவே ஆகப் பெரிய தொகையாகும். சிங்கப்பூர் உட்பட, தென்கிழக் காசியாவில் விற்கப்படும் அலுமி னிய மின்னணு மின்தேக்கிக ளின் (Electrolytic capacitors) விலையை உறுதி செய்வதில் அந்த ஐந்து நிறுவனங்களும் பேசி முடிவெடுத்துக்கொள்ளும். மின்னணு மின்தேக்கி என் பது கணினிகளிலும் வீட்டு மின்சாதனங்களிலும் பயன்படுத்தப் படும் மின்சாரப் பாகமாகும்.

பேனசானிக் இன்டஸ்டிரியல் டிவைசஸ் சிங்கப்பூர் மற்றும் பேன சானிக் இன்டஸ்டிரியல் டிவைசஸ் மலேசியா, ரூபிகான் சிங்கப்பூர், சிங்கப்பூர் கெமி-கான், நிச்சிகோன் சிங்கப்பூர், எல்னா (ELNA) எலக்ட்ரானிக்ஸ் ஆகியவையே அந்த ஐந்து உற்பத்தியாளர்கள். அலுமினிய மின்னணு மின் தேக்கிகள் சந்தையில் மூன்றில் இரண்டு பங்குகளுக்கு மேலாக இந்த ஐந்து நிறுவனங்களும் வகிக்கின்றன.

அலுமினிய மின்னணு மின் தேக்கிகள். படம்: சிங்கப்பூர் வணிகப் போட்டித்தன்மை ஆணையம்