சிங்கப்பூரில் டோனியின் கிரிக்கெட் பயிற்சி மையம்

சிங்கப்பூரில் டோனியின் கிரிக்கெட் பயிற்சி மையம்

1 mins read
188c1a00-aabb-4af7-9586-9897d3797262
-

சிங்கப்பூர்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் டோனி சிங்கப்பூரில் கிரிக்கெட் பயிற்சி மையத்தைத் தொடங்கவுள்ளார். வரும் 20ஆம் தேதி செயிண்ட் பேட்ரிக்ஸ் பள்ளியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனியின் இந்தப் பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளது. இந்தியா அல்லாமல் வெளி நாட்டில் தொடங்கப்படும் இரண் டாவது பயிற்சி மையம் இது.

கடந்த நவம்பர் மாதம் துபாயில் எம்எஸ் டோனி கிரிக்கெட் பயிற்சி மையம் நிறுவப்பட்டதையடுத்து இப்போது சிங்கப்பூரிலும் திறக்கப் படுகிறது. இந்த பயிற்சி மையம் டோனி உருவாக்கிய பாடத்திட்டத் தின் கீழ் செயல்படும். சிங்கப்பூர் கிரிக்கெட் அணி வீரர்கள் சேத்தன் சூரியவன்‌ஷி, சமிந்தா ருவான், கிரிக்கெட் மகளிர் அணித் தலைவி ஜி.கே. திவ்யா ஆகியோர் டோனியுடன் இணைந்து செயல்படுவார்கள்.

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையில் கடந்த மாதம் நடை பெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பந்தடிப்பில் ஈடுபட்ட டோனி. படம்: ஏஎஃப்பி