சிங்கப்பூரின் 4ஆம் தலைமுறை தலைவர்களிடமிருந்து பதில் நடவடிக்கையை எதிர்பார்த்துதான் தாம் சிங்கப்பூரின் அடுத்த பிரதமரை விரைவில் தேர்ந் தெடுக்க வேண்டியதன் முக்கியத் துவம் குறித்து ஃபேஸ்புக் இணையத்தளத்தில் பதிவிட்டதாக ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் கூறியுள்ளார்.
சிங்கப்பூரின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அவசரம் குறித்தும் புத்தாண்டிற்கு முதல் நாள் தமது ஃபேஸ்புக் இணையப்பக்கத்தில் பதிவிட்டிருந் தார்.
அதில் தற்போதைய இளம் தலைவர்கள் தங்களது பிரதமரை அடுத்த ஆறு அல்லது ஒன்பது மாதங்களுக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

