தாம்சன் சாலை-=தோ பாயோ ரைஸ் சந்திப்பில் இரண்டு கார்கள் நேற்று காலை மோதிய சம்பவத்தில் 48 வயது கார் ஓட்டுநர் காய முற்றார். அந்த ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சாலைச் சந்திப்பில் கார்கள் மோதியதால் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டதாக அந்த வழியே சென்ற பாதசாரி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார். நேற்று காலை சுமார் 9.50 மணிக்கு அந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக போலிசார் கூறினர்.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆடவர் சுயநினைவு டன் இருந்ததாகவும் அவருக்கு நெஞ்சு வலி இருப்பதாகக் கூறியதாகவும் தெரிவிக்கப் பட்டது. சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை நடைபெறுகிறது.

