விரைவுச்சாலையில் எரிந்த பேருந்து

விரைவுச்சாலையில் எரிந்த பேருந்து

1 mins read
c99e61ce-e8ed-4003-85d3-df27bb2128bd
-

மரினா கோஸ்டல் விரைவுச்சாலை யில் நேற்று பிற்பகலில் தனியார் பேருந்து ஒன்றில் தீப்பற்றியது. காலாங்=பாய லேபார் விரைவுச் சாலையை நோக்கிய ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலை வெளிவழியில் இவ்விபத்து நிகழ்ந்ததாக பிற்பகல் 2 மணியளவில் நிலப் போக்கு வரத்து ஆணையத்தின் டுவிட்டர் தெரிவித்தது. அதன் காரணமாக ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலை வெளிவழி போக்குவரத்துக்கு மூடப்பட்டதாக வும் அது குறிப்பிட்டது. இது பற்றி தங்களுக்கு 2 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. பேருந்தின் இயந் திரப் பகுதியில் பற்றி எரிந்த தீயை அதிகாரிகள் அணைத்துவிட்டதாக வும் அப்படையின் பேச்சாளர் தெரி வித்தார். தீப்பிடித்ததை அறிந்ததும் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் தாங்களாக வெளி யேறிச் சென்றுவிட்டதாகவும் இச் சம்பவத்தில் யாருக்கும் காய மில்லை என்றும் அவர் கூறினார். தீப்பிடித்ததற்கான காரணம் விசா ரிக்கப்பட்டு வருகிறது.

தனியார் பேருந்து தீக்கிரையாவதை அருகில் காருக்குள் இருந்த ஒருவர் படம் பிடித்தார். படம்: சமூக ஊடகம்