பொதுமக்கள் வடிவமைத்துக் கட் டிய விளையாட்டுத்திடல் செம்ப வாங் குளோசில் திறந்து வைக்கப் பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டு களுக்கு முன்பு திடல் அமைக்கும் பணி தொடங்கியது. மரவீடு, குச்சிகளைக் கொண்டு அமைக்கப் படும் மீன்பிடி வசதிகளான கெலோங் போன்ற வடிவமைப்பு களைக் கொண்ட விளையாட்டுத் திடலை கேன்பரா வீடமைப்புப் பேட்டையின் குடியிருப்பாளார்கள் உருவாக்கியுள்ளனர்.
விளையாட்டுத் திடலின் இறுதிக்கட்ட பணிகளை நேற்று காலை குடியிருப்பாளர்கள் நிறைவு செய்தனர். வீடமைப்புக் கழகத்தின் 'பில்ட்-எ-பிளேகிரவுண்ட்' எனும் முயற்சியின் விரிவாக்கம் பற்றி கேன்பெரா விளையாட்டுத் திடலை நேற்று திறந்து வைத்த தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் அறிவித்தார்.
சுவா சூ காங்கில் உள்ள 'தெம்புசு பார்க்', உட்லண்ட்ஸில் இருக்கும் 'அட்மிரல் கார்டன்', பாசிர் ரிஸ்ஸில் இருக்கும் 'சீஷெல் பார்க்', தோ பாயோ லோரோங் 1, லோரோங் 8 ஆகியவற்றில் இருக் கும் இரண்டு பூங்காக்கள் ஆகிய ஐந்து விளையாட்டுத் திடல்களும் மறுசீரமைக்கப்படும்.
செம்பவாங் குளோசில் குடியிருப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட 185 ச.மீ. அளவிலான விளையாட்டுத் திடலுக்கு 'அட்வென்சர் பிளேகிரவுண்ட்@கேன்பெரா' என்று பெயரிடப்பட்டு உள்ளது. படம்: சாவ்பாவ்