சுதாஸகி ராமன்
இந்தியாவுக்கும் ஆசியானுக்கும் இடையே ஏற்படக்கூடிய மாபெரும் வர்த்தக ஒப்பந்தம் வரலாறு காணாத அளவில் வாய்ப்புகளை வழங்கவிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய வெளியுறவு அமைச் சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், இந்தியா-ஆசி யான் இடையேயான பொருளியல் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றார். ஆசியானுக்கும் இந்தியா உட் பட அதன் ஆறு முக்கிய பங் காளிகளுக்கும் 'ஆர்சிஇபி' எனப் படும் வட்டாரம் முழுவதுக்குமான பொருளியல் பங்காளித்துவம் உல கிலேயே மிகப் பெரிய வர்த்தகக் கூட்டணியை உருவாக்குவதற்கான முக்கியமான வாய்ப்பு என்றும் சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான ஆசியான், 'இந்தியா பிரவாசி பாரதிய திவாஸ்' மாநாட்டின் இரண்டாம் நாளில் ஆற்றிய சிறப்புரையில் அவர் குறிப்பிட்டார்.
'ஆர்சிஇபி' செயல்பாட்டுக்கு வந்தால் அது உலக மக்கள் தொகையில் பாதிப்பேரை உள்ள டக்குவதாக இருப்பதோடு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதியையும் உள்ளடக்குவதாக இருக்கும். "பொருளியல் ஒருங்கிணைப்பு என்பது மந்திரமில்லை. ஆனால், இந்தியா, ஆசியான் நாடுகள் ஆகியவற்றின் பரஸ்பர செழிப்புக்கு முக்கியமானது," என்று திரு விவியன் பாலகிருஷ்ணன் குறிப் பிட்டார்.
'இந்தியா பிரவாசி பாரதிய திவாஸ்' மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் (நடுவில்), இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

