சண்முகம்: சமய சகிப்புத்தன்மைக்கு எதிராகப் பேசினால் வெளிநாட்டுப் போதகர்களுக்கு தடை விதிக்கப்படும்

சண்முகம்: சமய சகிப்புத்தன்மைக்கு எதிராகப் பேசினால் வெளிநாட்டுப் போதகர்களுக்கு தடை விதிக்கப்படும்

1 mins read

குறிப்பிட்ட சில சமய போதகர்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்குத் தடை விதிப்பது ஏன் என்பதில் சிங்கப்பூர் தெளிவான நிலைப் பாட்டைக் கொண்டிருக்கிறது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நேற்று நாடாளு மன்றத்தில் கூறியுள்ளார். சமய சகிப்புத்தன்மைக்கு எதி ரான போதனையைப் போதிப்பவர் களும் அல்லது சமய அடிப்படையில் சமூகத்தில் பிரிவினையை உரு வாக்குவோரும் தடை செய்யப்படு வர் என்று அவர் விவரித்தார்.

கடந்த ஆண்டு மூன்று இஸ் லாமிய சமய போதகர்களுக்கு இங்கு தடை விதித்தது குறித்து அல்ஜுனிட் குழுத்தொகுதி உறுப் பினர் ஃபைஸால் மனாப், சுவா சூ காங் குழுத்தொகுதி உறுப்பினர் ஸாக்கி முகம்மது ஆகியோர் கேட்ட கேள்விக்கு திரு சண்முகம் பதிலளித்தார். "அவர் வன்முறையைத் தூண்டி னாலோ நமது பல இன, பல சமய சமூகத்தில் பங்கம் விளைவிக்கும் விதமான பிரிவினைவாத சகிப்புத் தன்மைக்கு எதிரான போதனையை ஊக்குவித்தாலோ அவருக்கு அனுமதி மறுக்கப்படும்," என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.