'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' மோசடி மறுஆய்வுக்கு புதிய பணிக்குழு

'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' மோசடி மறுஆய்வுக்கு புதிய பணிக்குழு

1 mins read

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் மோசடி குறித்து மறுஆய்வு மேற் கொள்ள பல அமைப்புகளைக் கொண்ட புதிய பணிக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பண மோச டியைக் கண்டுபிடிக்கும் திட்டத்தை எப்படி மேம்படுத்தலாம் என இந்த பணிக் குழு ஆராயும் என்று கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் ஒரு நல்ல, செயல் திறன்மிக்க, தகவல் பகுத்தறியும் திட்டம் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டுக்குள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். வாழ்நாள் கற்றலை உள்ள டக்கும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத் தில் கிட்டத்தடட் S$40 மில்லியன் பணம் மோசடி செய்யப்பட்டுவிட் டது என கடந்த மாதம் செய்தி வெளியானது. அதனை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.