தரவு பகிர்வு: புதிய சட்டம்

தரவு பகிர்வு: புதிய சட்டம்

1 mins read

சிங்கப்பூரர்களின் தனிப்பட்ட தக வல்களை அவர்களின் அனுமதி யின்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொதுத்துறை அதி காரிகளுக்கு $5,000 வரை அப ராதம், இரண்டு ஆண்டு வரை சிறை அல்லது இரண்டும் தண்ட னைகளாக விதிக்கப்படக்கூடும். தரவுகளைத் தங்கள் சொந்த நல னுக்காகப் பயன்படுத்தி கொள் வோருக்கும் இது பொருந்தும். நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட பொதுத்துறை (ஆளுமை) மசோதா, தரவுகளுக்கு விழையும் அமைப்புகளுக்கு அவற் றைப் பாதுகாக்கும் பொறுப்பும் உள்ளது என்று கூறுகிறது.

பொதுச் சேவை புத்தாக்க முயற்சிகளுக்குத் தலைமை வகிக் கும் கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங், பொதுத் துறையில் தரவு பகிர்வு என்பது ஏற்கெனவே நடப்பில் உள்ளது. உதாரணத்துக்கு, 'மைஇன்ஃபோ' தளம் இணையம் வழி அரசாங்க சேவை விண்ணப்பங்களுக்குத் தேவைப்படும் தகவல்களைத் தா னாகவே பூர்த்தி செய்துவிடுகிறது என்றார்.