சாங்கி விமான நிலையத்தில் ஸ்கூட் விமானத்தின் கதவு சேதம்

சாங்கி விமான நிலையத்தில் ஸ்கூட் விமானத்தின் கதவு சேதம்

1 mins read
bdda3287-be16-4eb9-853e-b882e6e3cb66
-

சாங்கி விமான நிலையத்தில் ஸ்கூட் விமானம் ஒன்றில் பராம ரிப்புப் பணி நடந்துகொண்டிருந்த போது அந்த விமானத்தின் கதவு சேதம் அடைந்துவிட்டது. ஸ்கூட் நிறுவனத்தின் 787 விமானத்தில் ஒரு கதவு சேதம் அடைந்துவிட்டதாகவும் அது சரி செய்யப்பட்டு வருவதாகவும் திங் கட்கிழமை இந்த நிறுவனத்தின் பேச்சாளர் கூறியதாக சேனல் நியூஸ் ஏ‌ஷியா தெரிவித்தது. இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்ததாக ஃபிளைட் குளோபல் என்ற விமானப் போக்குவரத்து இணையத்தளம் குறிப்பிட்டது. சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என்றும் இச்சம்பவம் நிகழ்ந்தபோது விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை என்றும் ஸ்கூட் தெரிவித்தது.

இருந் தாலும் இச்சம்பவம் பற்றி புலன் விசாரணை நடந்துவருவதால் இது எப்பொழுது நிகழ்ந்தது என் பதை தெரிவிக்க இயலவில்லை என்று நிறுவனம் குறிப்பிட்டது. விமானத்தின் பிரேக்குகள் போடப்படாமல் இருந்த நிலையில் விமானம் நகர்ந்து பயணிகள் நடந்து வரும் நடைபாலத்தில் இடித்துவிட்டதாக ஃபேஸ்புக் தகவல் தெரிவித்தது. சேதம் அடைந்த கதவைக் காட் டும் படங்கள் ஜெட்லைன் மார்வல் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் திங் கட்கிழமை நள்ளிரவில் பதிவேற்றப் பட்டன. ஸ்கூட் விமானம் பயணி கள் நடைபாலத்தில் மோதி நிற் பதையும் அதனால் விமானத்தின் கதவின் ஒரு பகுதி கழன்று இருப் பதையும் அந்த ஃபேஸ்புக் படங் கள் காட்டின.

ஸ்கூட் விமானத்தின் கதவு சேதம் அடைந்தது. படம்: ஜெட்லைன் மார்வல்/ஃபேஸ்புக்