சிங்கப்பூர் தொழில்நுட்ப நிறுவனங் கள், தங்கள் புத்தாக்கங்களை இப்போது இந்தியாவில் முன்னோடி திட்ட அடிப்படையில் பரிசோதித் துப் பார்க்கமுடியும். அதன் மூலம் அவை இந்திய தொழில்நுட்ப நிறு வனங்களின் தலைசிறந்த நடை முறைகளைக் கற்றுக்கொள்ளலாம். 'ஐஇ' எனப்படும் இன்டர்நேஷ னல் என்டர்பிரைஸ் அமைப்பிற்கும் இந்திய தொழில்துறைக் கூட்ட மைப்புக்கும் இடையில் நேற்று கையெழுத்தான புரிந்துணர்வுக் குறிப்பைத் தொடர்ந்து சிங்கப்பூர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டுகிறது.
சிங்கப்பூர்-இந்திய நிறுவனங் களுக்கு இடையில் தொழில்நுட்பத் துறையில் யோசனைகளை பரஸ் பரம் பகிர்ந்துகொள்ளவும் பங் காளித்துவ தொழில் உறவிற்கு வழியை ஏற்படுத்தவும் இந்தப் புரிந்துணர்வுக் குறிப்பு வகை செய் கிறது. இதன் விளைவாக ஐஇ சிங்கப்பூர் நிறுவனமும் இந்திய தொழில் துறைக் கூட்டமைப்பும் கூட்டாக ஏற்பாடு செய்யும் செயல் திட்டங்களில் சிங்கப்பூர் நிறுவனங் கள் பங்கெடுத்துக்கொண்டு இந் தியாவின் தொழில்நுட்பத் துறை பற்றி சிறந்தமுறையில் புரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதோடு, சுற்றுச்சூழல் திட்டங்களிலும் அந்த நிறுவனங் கள் பங்காளிகளாகத் தொழிலில் ஈடுபட முடியும். அடுத்த தலைமுறை சிங்கப் பூர்-இந்திய தொழில்நுட்பத் தொழில்துறையின் தலைவர்களை ஒருங்கிணைப்பதற்கு உதவக் கூடிய தளங்களையும் இரு நாடு களின் இந்த அமைப்புகள் ஏற் படுத்தவிருக்கின்றன என்று ஐஇ சிங்கப்பூர் நேற்று தெரிவித்தது.

