மருத்துவப் பிரச்சினை இருக்கும் ஊழியர்களுக்கு எதிராக முதலா ளிகள் பாரபட்சமாக அதிகம் நடந்துகொள்வதில்லை என மனிதவள அமைச்சின் புள்ளிவிவ ரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் நியாயமற்ற வேலை நடைமுறை களின் தொடர்பில் மனிதவள அமைச்சு, நியாயமான, மேம்பட்ட வேலை நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணி (டஃபெப்) ஆகியவற்றால் விசாரிக்கப்பட்ட 2,100 புகார்களில் மூன்று மட்டுமே மருத்துவப் பிரச்சினை இருக்கும் ஊழியர்கள் தொடர் பானவை என மனிதவள துணை அமைச்சர் சேம் டான் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால், அந்த மூன்று புகார் களிலும் பாரபட்சம் இல்லை என் பது விசரணையில் தெரியவந்த தாக திரு டான் கூறினார். இந்தப் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வியைப் பதிவுசெய்திருந்த ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் வு மெங், மனநலப் பிரச்சினையில் இருந்து மீண்ட, ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்றுவரும் சிலர், தங்களது மருத்துவ நிலை, முதலாளிகளைத் தவறான அபிப் பிராயத்துக்கு இட்டுச்செல்லக் கூடும் என வருத்தம் தெரிவித்த தாகக் குறிப்பிட்டார்.
பாரபட்சமாக நடந்துகொள் வதாகச் சந்தேகித்தால் அது பற்றி மனிதவள அமைச்சு, டஃபெப் ஆகியவற்றிடம் புகார் செய்யலாம் என்று திரு டான் கூறினார். மேலும், "பாரபட்சமாக நடத்துவதை முதலாளிகள் நியாயப்படுத்துவது கண்டுபிடிக் கப்பட்டால் முறையான ஆள் சேர்ப்பு, வேலை நடைமுறைகளைச் செயல்படுத்துவதை உறுதிசெய்ய மனிதவள அமைச்சு வலுவான நடவடிக்கைகளை எடுக்கும்," என்றும் அவர் சொன்னார்.

