பாலர் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை தொடர்பில் அமைச்சர் விளக்கம்

பாலர் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை தொடர்பில் அமைச்சர் விளக்கம்

1 mins read
838ceb31-f8df-4e39-811b-46e46aa85a8a
-

பாலர் கல்வித்துறையில் கல்வி அமைச்சு பெரும்பங்கு வகிப்பதால், பாலர் கல்வித் தரத்தை உயர்த்து வதற்கான திட்டங்கள், பள்ளி களில் பிள்ளைகளைச் சேர்க்கும் நடைமுறை ஆகியவை குறித்து சில உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் கேள்விகளை முன்வைத்தனர். தொடக்கப்பள்ளிகள் இயங்கும் வளாகத்திலேயே இயங்கும் கல்வி அமைச்சின் பாலர் பள்ளி மாணவர் களுக்கு அந்தத் தொடக்கப் பள்ளியில் சேருவதற்கு முன் னுரிமை அளிப்பது பற்றி ஜாலான் புசார் குழுத்தொகுதி உறுப்பினர் டெனிஸ் புவா கேள்வி எழுப்பினார்.

கடந்த நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் இந்த ஆண்டுக்கான தொடக்கப் பள்ளி முதல் வகுப்புப் பதிவில் இருந்து நடப்புக்கு வரும். தொடக் கத்தில் 12 பாலர் பள்ளிகள் இந்த நடைமுறைக்கு உட்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித் தது. அதன்படி, தொடக்கப்பள்ளி யில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் அத்தகைய பாலர்பள்ளி மாணவர் கள் 2A2 பிரிவின்கீழ் வருவர்.

வகுப்பில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் கல்வி அமைச்சின் பாலர் பள்ளி மாணவர்கள். கோப்புப்படம்.