சட்டம் மட்டும் போதாது; சமூகத்துக்கும் பங்குண்டு - அமைச்சர் டெஸ்மண்ட் லீ

சட்டம் மட்டும் போதாது; சமூகத்துக்கும் பங்குண்டு - அமைச்சர் டெஸ்மண்ட் லீ

1 mins read

அறிவுத் திறன் குறைபாடுடைய திருவாட்டி ஆன்னி யீ தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு பின் பரிதாப கரமாக மரணமடைந்ததைக் குறிப் பிட்டு, சமுதாயத்தில் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகின்றவர் களைக் கண்காணிப்பதற்கான முக்கியத்துவம் குறைந்திருப்ப தாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ (படம்) கூறினார்.

குற்றவியல் தண்டனைச் சட்டம், எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்களுக்கான சட்டம் ஆகியவை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளன . அவற்றின் வழியாக, துன்புறுத் துபவர்களை நீதிமன்றத்தில் நிறுத் துவதோடு பாதிப்புக்குள்ளாகக் கூடிய பெரியவர்களைப் பாதுகாக் கவும் முடியும். ஆனால், சட்டரீதியான பாதுகாப்பு மட்டும் போதாது என்று திரு லீ கூறினார்.

"அறிவுத்திறன் குறைந்தவர்கள் மட்டுமின்றி, உடற்குறையுடைய வர்கள், சிறுவர்கள், எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆகி யோர் துன்புறுத்தப்படுவதை குடும்ப உறுப்பினர்கள், உடன் பணிபுரிபவர்கள், அக்கம்பக்கத் தார், வழிப்போக்கர்கள் போன்றோர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றாலன்றி சட்ட நடவடிக்கைகள் உகந்த விளைவு களை ஏற்படுத்தாது," என்றும் ஜாலான் புசார் குழுத்தொகுதி உறுப்பினர் லில்லி நியோவின் கேள்விக்கு பதிலளித்தபோது திரு லீ கூறினார்.