குற்றவியல் தண்டனைச் சட்ட மறுஆய்வின் தொடர்பில் பொது மக்கள் கூடிய விரைவில் கருத்து களைத் தெரிவிக்கலாம். இந்த மறுஆய்வு இவ்வாண்டு முடி வடையவுள்ளது. தற்கொலை முயற்சியைக் குற்ற மாக்கும் சட்டம், திருமண வாழ்க்கையில் பாலியல் பலாத் காரத்திற்கு விலக்கு அளிக்கும் சட்டம், பாலியல் குற்றவாளிகளுக் கான தண்டனை, புதிய குற்றவியல் சட்டங்களுக்கான தேவை போன் றவை மறுஆய்வில் பரிசீலிக்கப்படு வதாக உள்துறை, சட்ட அமைச்சர் திரு கா.சண்முகம் நேற்று கூறினார். மறுஆய்வை மேற் கொள்ள 2016 ஜூலை மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மறுஆய்வின் முடிவு, குறிப்பா கத் தற்கொலை, திருமண வாழ்க்கையில் பாலியல் பலாத்காரம் போன்ற விவகாரங்கள் குறித்து, நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கொக் ஹெங் லியுன் எழுப்பிய கேள்விக்குத் திரு சண்முகம் பதிலளித்தார். "இவற்றோடு, நமது குற்றவியல் தண்டனைச் சட்டங்களின் அடிப் படையாக விளங்கும் கோட்பாடு களின் அடிப்படைக்கூறுகளையும் குழு மறுஆய்வு செய்கிறது," என்றார் திரு சண்முகம்.

