$2 மில்லியன் எரிபொருள் திருட்டு; 11 ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

$2 மில்லியன் எரிபொருள் திருட்டு; 11 ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

1 mins read
b7b02af1-514c-4d1f-b59e-3ae4ed111ee4
-

ஷெல் சிங்கப்பூர் நிறுவனத்தில் $2 மில்லியனுக்கு மேல் மதிப்புள்ள எரிபொருளைக் கையாடியதன் தொடர்பில் நேற்று 11 ஆடவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஞாயிறு, திங்கள் கிழமைகளில் கைது செய்யப்பட்ட 17 சந்தேக நபர்களில் ஒரு பகுதி யினர் அவர்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒன்பது பேர் அந்நிறுவனத்தின் தயாரிப்புத்தளத்தில் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப் பட்டது.

அவர்கள் 34 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். மேலும், இந்த ஒன்பது பேரும் ஷெல் நிறுவனத்தின் ஊழியர்கள். அவர்களின் பெயர்கள் நீதிமன்றத் தில் வெளியிடப்பட்டன. முஸாஃபர் முகமது அக்ரம், 36, ஜுவான்டி புங்கோட், 41, காய் ஸிஸே„ங், 34, தியா கோக் ஹ்வீ, 41, கோ சூன் வெய், 35, முகம்மது அலி முகம் மது நோர், 51, முகமது இப்ராகிம் கே.அப்துல் மஜித், 52, அப்துல் லத்திஃப் இப்ராகிம், 59, ரிச்சர்ட் கோ சீ கியோங், 48, ஆகியோர் குற்றச்சாட்டில் இடம் பெற்றவர்கள்.

குற்றம் சாட்டப்பட்டோரில் இருவர். படம்: ‌ஷின் மின்