முஹம்மது ஃபைரோஸ்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தை (என்டியு) அறிவார்ந்த பல்கலைக்கழக வளாகமாக உரு மாற்ற திட்டமிட்டுள்ளார் அதன் புதிய தலைவரான பேராசிரியர் சுப்ரா சுரேஷ், 61 . பல்கலைக்கழக வளாகத்தில் மேம்பட்ட கற்றல், வாழ்க்கை அனுபவங்களை வழங் குவதில் ஆற்றல்வாய்ந்த மின்னி லக்கத் தொழில்நுட்பம் பயன்படுத் தப்படும். இம்மாதம் 1ஆம் தேதி என்டியு வின் தலைவராகப் பொறுப்பேற்றார் பேராசிரியர் சுரேஷ். அதையடுத்து, அறிவார்ந்த பல்கலைக்கழக வளா கத் திட்டத்தின் முதல் கட்டமாக புதிய 'என்டியு ஸ்மார்ட் பாஸ்' எனப்படும் அறிவார்ந்த அட்டையை நேற்று அவர் வெளியிட்டார். என்டியுவில் பயிலும் மாணவர்கள், பணிபுரியும் ஊழியர்கள் அனைவ ருக்கும் இந்த அட்டை வழங்கப் படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த அட்டையைக் கொண்டு பல்கலைக்கழக வளாகத்தில் பல் வேறு தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். உணவகத் தில் உணவுக்காகவும் பேரங்காடி யில் மளிகை பொருட்களுக்காகவும் இந்த அட்டையைக் கொண்டு கட்டணம் செலுத்த முடியும். அத் துடன், வாகனத்தை நிறுத்துவ தற்கும் பொதுப் போக்குவரத்து கட்டணத்தைச் செலுத்தவும் இந்த அட்டை உதவும்.
மின்சக்தியில் இயங்கும் வாகனம் ஒன்றில் 'என்டியு ஸ்மார்ட் பாஸ்' அட்டையுடன் அமர்ந்திருக்கும் என்டியுவின் புதிய தலைவர் பேராசிரியர் சுப்ரா சுரேஷ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

