பொய்ச் செய்திகள் குறித்து ஆராய சிறப்புக் குழு அமைப்பு

பொய்ச் செய்திகள் குறித்து ஆராய சிறப்புக் குழு அமைப்பு

1 mins read

வேண்டுமென்றே இணையத்தில் பரப்பப்படும் பொய்ச் செய்திகளால் சிங்கப்பூர் எளிதில் பாதிக்கப்பட லாம் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் எச்ச ரித்துள்ளார். இணையம் வழியாக வேண்டு மென்றே பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதற்கான காரணங் களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆராய்வதற் காக ஒரு சிறப்புக் குழுவை அமைப்பதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நேற்று அவர் முன்மொழிந்தார். விவாதத்திற்குப் பின் நடந்த வாக்கெடுப்பில் நாடாளுமன்றத் தில் இருந்த 80 உறுப்பினர்களும் சிறப்புக் குழு அமைப்பதற்கான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக் களித்தனர்.

அந்தச் சிறப்புக் குழு பத்து உறுப்பினர்களைக் கொண்டிருக் கும் என்றும் பொதுமக்களிடம் இருந்து கருத்து சேகரிப்பதுடன், முடிந்த அளவிற்கு விரிவான ஆலோசனைகளையும் அந்தக் குழு மேற்கொள்ளும் என்று திரு சண்முகம் தெரிவித்தார். பொய்ச் செய்திகள் பரப்பப்படு வதைத் தடுக்கத் தேவையான எதிர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்த பின்னர், அந்தக் குழு தனது பரிந்துரைகளை ஓர் அறிக்கையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்.