சிங்கப்பூரின் வனவிலங்குகளைப் பற்றி புரிந்துகொண்டு அவற்றை எப்படிக் கையாள்வது என்பது பற்றி பொதுமக்களுக்குச் சிறந்த முறையில் போதிப்பதற்காக தேசிய பூங்கா வாரியம் புதிதாக ஆறு மாதச் செயல்திட்டம் ஒன்றைத் தொடங்குகிறது. 16 முதல் 30 வரை வயதுள்ள மக்களுக்காக அந்தச் செயல்திட் டம் இடம்பெறும். மனிதர்களும் வனவிலங்குகளும் சகவாழ்வு வாழ்வதன் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு அந்தச் செயல்திட்டம் போதிக்கும். 'பன்மய உயிரியல் சவால்கள்' என்ற அந்தச் செயல்திட்டத்தில் இதுவரை சுமார் 80 பேர் பதிந்து கொண்டு இருக்கிறார்கள்.
புதிய போதனைத் திட்டம், பயிலரங்குகளையும் ஆய்வரங்குகளை யும் பயிற்சி வகுப்புகளையும் நடத் தும். அவற்றின் மூலம் மக்கள் பல்வேறு விலங்குகளைப் பற்றி நடந்துவரும் ஆய்வுகள் குறித்து தெரிந்துகொள்ளலாம். நகரமய பகுதிகளில் வாழ்ந்து வரும் சிங்கப்பூரர்கள் பெரும் பாலும் சந்திக்கக்கூடிய காட்டுப் பன்றி, ஆமை, நீர்நாய் உள்ளிட்ட ஐந்து விலங்குகளில் புதிய செயல்திட்டம் ஒருமித்த கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

