சிங்கப்பூரில் வனவிலங்கு சரணாலயங்களில் சென்ற ஆண்டு 540 விலங்குகள் பிறந்தன. சிங்கப்பூர் விலங்கு காட்சி சாலைகளில் 173, ரிவர் சஃபாரியில் 43, இரவு சஃபாரியில் 90, ஜூரோங் பறவை பூங்காவில் 234 விலங்குகள் பிறந்தன. அவை 145 சிற்றினங் களைச் சேர்ந்தவை. இவற்றில் 39 சிற்றினங்கள் அரிய விலங்குகள் என்று வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. புதிதாகப் பிறந்த விலங்குகளில் போர்னியோ மனிதக் குரங்கு, நீர்யானை முதலானவை அடங்கும்.
அருகி வரும் இனத்தைச் சேர்ந்த கன்சா என்ற இந்த போர்னியோ பெண் மனிதக் குரங்கு சிங்கப்பூரில் சென்ற ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி பிறந்தது. இதனுடன் சேர்ந்து இங்கு வெற்றிகரமான முறையில் 46 மனிதக் குரங்குகள் பிறந்துள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

