தொல்பொருள் ஆய்வாளருக்கு சிங்கப்பூர் முதல் வரலாற்று விருது

தொல்பொருள் ஆய்வாளருக்கு சிங்கப்பூர் முதல் வரலாற்று விருது

1 mins read
6a66cf83-50c4-4d6d-9cf8-635ba6a33220
-

சிங்கப்பூரின் வரலாறு, 1819ல் சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ் தரையிறங்கியதற்கு முந்தைய காலத்திற்கும் பழமையானது என்பதை மெய்ப்பித்த முன்னோடி தொல்பொருள் ஆய்வாளருக்கு முதல் சிங்கப்பூர் வரலாற்று விருது வழங்கப்பட்டு இருக்கிறது. பேராசிரியர் ஜான் என் மிக்சிக், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திடமிருந்து அந்த விருதைப் பெற்றிருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த இந்தப் பேராசிரியர் அவர் எழுதிய ஒரு புத்தகத்தின் அடிப்படையில் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இந்தப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 'சிங்கப்பூரும் கடலின் பட்டு வழியும் 1300-1800' என்ற பேராசிரியரின் புத்தகம், சிங்கப்பூரின் வரலாறு பற்றிய 25 ஆண்டுகால தொல்பொருள் ஆய்வுகளை விவரிக்கிறது. அந்த வரலாறு 14வது நூற்றாண்டு பழமையானதாகும்.

சிங்கப்பூரின் முதல் வரலாற்று விருதைப் பெற்ற பேராசிரியர் ஜான் என் மிக்சிக். படம்: பெரித்தா ஹரியான்