2019க்குள் மின்சார, ஓட்டுநரில்லா பேருந்து

2019க்குள் மின்சார, ஓட்டுநரில்லா பேருந்து

1 mins read

மின்சாரத்தைக் கொண்டு இயங் கும் ஓட்டுநரில்லா பேருந்தை உரு வாக்க நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (என்டியு) வோல்வோ பஸ் நிறுவனமும் இணைந்து செயல்படும் என்றும் சிங்கப்பூரில் அந்தப் புதிய மேம்பாட்டை 2019ஆம் ஆண்டின் முதல் பகுதியில் சோதனை செய்யும் நோக்கம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

மின்னேற்றியைக் கொண்டு இயங்கும் 12 மீட்டர் நீளமுள்ள 40 பேர் அமரக்கூடிய இரண்டு பேருந் துகளை வோல்வோ நிறுவனம் வழங்கும் என்று நேற்று கையெ ழுத்தான பங்காளித்துவ உடன் படிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அந்த இரு பேருந்துகளிலும் தானியக்க ஓட்டும் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருக்கும். ஊடுகதிர்களைக் கொண்டு சுற்றுப்புறத்தை வரைபடமாக்கி இடற்பாடுகளைக் கண்டுபிடிக்கும் தெரு வெளிச்ச உணர்வுக் கருவி கள் மற்றும் 'ஜிபிஎஸ்' தொழில் நுட்பம் பேருந்தில் பொருத்தப்படும்.