புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவையில் தடை

புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவையில் தடை

1 mins read
f7b8b0b3-5ce8-4e44-a94b-04315a800067
-

புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவை நேற்று மீண்டும் தடை பட்டது. ரயில் தடக் கோளாறு காரண மாக சேவையில் தடங்கல் ஏற் பட்டதாகப் பிற்பகல் 2.30 மணி அளவில் எஸ்எம்ஆர்டி நிறுவனம் டுவிட்டர் மூலம் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட 14 ரயில் நிலையங்களிலும் வழக்கமான, இடைவழிப் பேருந்து சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்தது. பிற்பாடு சுமார் 3.50 மணி அளவில் நிலவரம் பற்றி நிறு வனம் மேல்விவரம் வெளியிட் டது.

பிற்பகல் 1.45 மணிக்குக் கியட் ஹோங் நிலையத்திற்கு அருகில் சமிக்ஞை நிறுத்தற்குறி வில்லையை ஒரு ரயில் சேதப் படுத்திவிட்டதாக நிறுவனம் தெரிவித்தது. ஓட்டுநர் இல்லாத இலகு ரயில் எந்த இடத்தில் துல்லியமாக நிற்கவேண்டும் என்பதைக் காட்டுவதற்கு நிறுத் தற்குறி வில்லை பயன்படுத்தப் படுகிறது. பாதிக்கப்பட்ட ரயில் சோத னைக்காக சேவையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டதாகவும் பொறியியல் குழுவினர் ரயில் சேவை முழுவதும் பாதுகாப்புச் சோதனை நடத்துவதாகவும் நிறுவனம் தெரிவித்தது. 2018-01-13 06:00:00 +0800