உடன்பிறப்புகளுக்குத் தண்டனை

உடன்பிறப்புகளுக்குத் தண்டனை

1 mins read

தில்லுமுல்லு காரியங்கள் மூலம் பெறப்பட்ட $400,000க்கும் அதிக தொகையை நேர்மையற்ற முறையில் பெறும் நோக்கத்துடன், ஆடவர் ஒருவருடன் சேர்ந்து சதித்திட்டம் போட்ட உடன்பிறப்புகள் இரண்டு பேருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ரோஸ்யான் சஜித் முகம்மது ரஃபி, 24, என்பவருக்கும் அவருடைய 25 வயது சகோதரி சஹிலாவுக்கும் வியாழக்கிழமை தலா 16 மாதம் சிறைத்தண்டனை கிடைத்தது. 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம், நிக்கலஸ் ரேயான் கூ, 23, என்பவருடன் சேர்ந்து சதித்திட்டம் போட்டு அதன்மூலம் மொத்தம் $441,545 தொகையைப் பெறுவதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறும் இரண்டு குற்றச் சாட்டுகளின் பேரில் உடன்பிறப்புகள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதர இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அந்தத் தொகை தில்லுமுல்லு மூலம் கிடைத்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரோஸ்யான் சஜித் முகம்மது ரஃபி, அவரின் சகோதரி சஹிலா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்