ஆண்டிராய்ட் தொலைக்காட்சி சாதன விற்பனையாளர்கள் மீது குற்றச்சாட்டு

ஆண்டிராய்ட் தொலைக்காட்சி சாதன விற்பனையாளர்கள் மீது குற்றச்சாட்டு

1 mins read
2768e65c-c2d2-4759-8286-3f3a92f278c1
-

பிரிமியர் லீக், ஃபாக்ஸ் ஆகியவற்றின் பதிப்பு உரிமைகளை மீறியதாக ஆண்டிராய்ட் தொலைக்காட்சி சாதன விற்பனையாளர்கள் இருவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. சில்லறை வர்த்தக நிறுவனமான சின்னெக்ஸ் டிரேடிங், அதனுடைய இயக்குநர் ஜியா ஸியோஃபெங், வர்த்தக நிறுவனமான அன்-நால், அதன் இயக்குநரான அப்துல் நஜிப் அப்துல் அஜிஸ் ஆகியோர் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்கள்.

சிங்கப்பூரில் ஆண்டிராய்ட் தொலைக்காட்சி சாதனம் போன்றவற்றை விற்பது சட்டபூர்வமானதுதானா என்பதைத் தீர்மானிக்கக் கூடிய மிக முக்கியமான வழக்காக இது இருக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. சிங்டெல், ஸ்டார்ஹப், ஃபாக்ஸ் நெட்வொர்க்ஸ் குரூப், பிரிமியர் லீக் ஆகியவை இந்த வழக்கைத் தொடுத்து இருக்கின்றன. அன்-நால் நிறுவனமும் அதன் இயக்குநரும் விசாரணை கோருகிறார்கள். சின்னெக்ஸ் மற்றும் அதன் இயக்குநருக்கு எதிரான வழக்கு பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்-நால் மற்றும் அதன் இயக்குநருக்கு எதிரான விசாரணை ஜனவரி 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அன்-நால் இயக்குநர் அப்துல் நஜிப் அப்துல் அஜிஸ், சின்னெக்ஸ் டிரேடிங் இயக்குநர் ஜியா ஸியோஃபெங் இருவர் மீதும் பதிப்புரிமைச் சட்டம் 136வது பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்