கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய நீரிழிவு நோயைக் கண்டுபிடித்து அவர்களுக்குச் சிறந்த முறையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க உதவும் நோக்கத்தில் புதிய வழி காட்டி நெறிமுறைகள் தீட்டப்பட்டு இருக்கின்றன. அனைத்துலக ஆகப்புதிய தரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ள அந்த நெறிமுறை கள், சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் பேறுகாலத்தின்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்ற ஆயிரக்கணக்கான மாதர்கள் உகந்த சிகிச்சையைப் பெற உதவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வழிகாட்டி நெறிமுறைகள் மிகவும் பரந்த அடிப்படையிலான வையாக இருக்கின்றன.
நீரிழிவு ஏற்படக்கூடிய ஆபத்து அதிகம் உள்ள கர்ப்பிணிகளை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளா மல் எல்லா மாதர்களுக்கும் பரி சோதனை நடத்துவதில் அவை ஒருமித்த கவனம் செலுத்துவதாக பேராசிரியர் டான் கோக் ஹியான் குறிப்பிட்டார். இவர் கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு முந்தைய நோய்க் குறி துறைத் தலைவராக இருக் கிறார்.

