பத்து தென்கிழக்காசிய நாடுகள் இணைந்த ஆசியான் வட்டார அமைப்பின் தலைமைத்துவத்தை சிங்கப்பூர் இவ்வாண்டு ஏற்றதை ஒட்டி வீடமைப்புப் பேட்டையில் திருவிழா கொண்டாட்டத்திற்கு வெளியுறவு அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. பீஷான்-அங் மோ கியோ பூங்காவின் ஃபிகஸ் கிரீன் பகுதி யில் நேற்று தொடங்கி ஞாயிற்றுக் கிழமை வரை 'ஆசியான் அனுபவம்' விழா நடைபெறுகிறது.
பிரதமர் லீ சியன் லூங் மற்றும் இதர அமைச்சர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு ஆசியான் அனுபவம் திருவிழா கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தனர். சிங்கப்பூரர்கள் உட்பட தென் கிழக்காசியாவில் வாழும் அனைவ ருக்கும் ஆசியான் பயனளித்துள் ளது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். ஆசியான் என்பது தூதர்களுக் கும் அதிகாரிகளுக்கும் மட்டும் உரியது அல்ல என்றும் அவர் தமது உரையில் நேற்று தெரிவித் தார்.
'தி ஹார்ட் எண்டர்பிரைஸ்' நிறுவனர் ஜொயென் லியாவ் அரிசியால் செய்யப்பட்ட 'ஆசியான் 2018' சின்னத்தை பிரதமர் லீ சியன் லூங்கிடம் வழங்குகிறார். அரிசியால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களை சிறப்பு தேவைகளுடைய மாணவர்கள் தயாரித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

