பேருந்துகளில் ஓட்டுநர்களைப் பாதுகாக்க தடுப்புக் கண்ணாடி

பேருந்துகளில் ஓட்டுநர்களைப் பாதுகாக்க தடுப்புக் கண்ணாடி

1 mins read
63ce5981-7e7d-4431-8cb0-4c56110d78b7
-

பேருந்து ஓட்டுநர்களைப் பாதுகாக் கக்கூடிய, அதிர்வுக்கு எதிரான தடுப்புகள் 16 பொதுப் பேருந்து களில் பொருத்தப்பட்டுள்ளன. அவை நேற்று முதல் சாலை களில் பயணத்தைத் தொடங்கி இருக்கின்றன. பேருந்து ஓட்டுநர்களை ஆள் கடத்தல், தாக்குதல் போன்றவற்றி லிருந்து பாதுகாக்கும் வகையில் நிலப் போக்குவரத்து ஆணையம் இந்தத் தடுப்புக் கண்ணாடிகளை ஆறு மாதச் சோதனை அடிப்படை யில் அறிமுகப்படுத்தியுள்ளது என்று தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் மெல்வின் யோங் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரி வித்தார்.

நேற்று முன்தினம் உட்லண்ட்ஸ் பேருந்து பணிமனைக்கு வருகை மேற்கொண்ட திரு யோங், பாது காப்புக் கண்ணாடி பொருத்தப்பட் டுள்ள பேருந்து ஒன்றில் ஏறி அதைப் பார்வையிட்டார். பின்னர் அதைப் பற்றிய விவ ரங்களையும் புகைப்படங்களையும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதி வேற்றம் செய்தார். சிங்கப்பூரில் பாதுகாப்பு அம் சங்கள் அனைத்து நிலைகளிலும் மேம்படுத்தப்பட்டு வரும் வேளை யில், பேருந்து ஓட்டுநர்களின் பாதுகாப்பும் கருத்தில் கொள்ளப் பட்டது என்றார் அவர்.

தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் மெல்வின் யோங் (வலது) ஓட்டுநர்களுக்கான பாதுகாப்புக் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ள பேருந்து ஒன்றை இம்மாதம் நேற்று முன்தினம் பார்வையிட்டார். படம்: பேஸ்புக்/மெல்வின் யோங்