சிங்கப்பூரின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் நேற்று குளிரைத் தடுக்க மேலும் இறுக்க மான உடைகளை அணிய வேண்டியதாயிருந்திருக்கும். காரணம் நேற்று ஜூரோங் வெஸ்ட், அட்மிரல்டி உட்பட சில வட்டாரங்களில் காலை 5 மணி முதல் காலை 6 மணி வரை வெப்பநிலை 21.2 டிகிரி செல்சியஸ் வரை இறங்கியது என்று வானிலை ஆய்வு நிலையம் நேற்று தனது இணையப் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
சிங்கப்பூரில் இந்த 21.2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை 2016ஆம் ஆண்டில் உணரப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. இது கடந்த வெள்ளிக்கிழமை ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் உணரப்பட்ட 21.4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையைவிட சற்று குறைவு. தென் சீனக் கடலிலிருந்து வீசும் பருவக்காற்றின் காரண மாக கடந்த சில நாட்களாக குளிர் நீடித்து வருகிறது. அங்கிருந்து காற்று பலமாக வீசினால், சிங்கப்பூரின் வெப்பநிலை சரியத் தொடங்கிவிடும். நேற்று நண்பகல், சிங்கப்பூரின் ஆகக் கூடுதலான வெப்பநிலை ஜூரோங் தீவில் 24.9 டிகிரி செல்சியசாக உணரப்பட்டது.

