மின்னணுவியல் குப்பையை மறுபயனீடு செய்து காசாக்கும் திட்டம் அறிமுகம்

மின்னணுவியல் குப்பையை மறுபயனீடு செய்து காசாக்கும் திட்டம் அறிமுகம்

1 mins read
Google News Preferred Icon

மின்னணுவியல் குப்பையை மறுபயனீடு செய்து அதை காசாக்க உருமாற்றும் திட்டம் சிங்கப்பூரில் அறிமுகம் கண்டிருக்கிறது. அதன் மூலம் கிடைக்கும் பணம், வசதி குறைந்த பிள்ளைகளுக்கு உதவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மாணவர் கைச்செலவு நிதிக்கு வழங்கப்படும். 'தி எச்டி மெக் ஐடி கிரீன்' இயக்கம் இவ்வாண்டு இறுதி வரை நடப்பில் இருக்கும். அடுத்த 12 மாதங்களில் 10,000 பயன்படுத்தப்பட்ட சொந்த கணினிகள், மடிக்கணினிகள், காட்சித் திரைகள் என 50,000 கிலோ கிராம் மின்னணு வியல் கழிவுகளைச் சேகரிப்பது இந்த இயக்கத்தின் நோக் கம்.

தென்மேற்கு வட்டாரத்தின் வருடாந்திர 'குப்பைகளுக்கு மளிகைப் பொருட்கள்' மறுபயனீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த 'தி எச்டி மெக் ஐடி கிரீன்' இயக்கம் செயல்படும் என்று நேற்று அந்த மறுபயனீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்த தென்மேற்கு வட்டார மேயர் திருவாட்டி லோ யென் லிங் தெரிவித்தார். "மறுபயனீடு செய்தல் சிங்கப்பூரை தூய்மையாகவும் பசுமையாகவும் வைத்திருப்பதோடு, வசதி குறைந்தவர்களின் முகங்களில் புன்னகையையும் வரவழைக்கும்," என்றும் குறிப்பிட்டார் திருவாட்டி லோ.