பொங்கல் உணர்வை அக்கம்பக்க இல்லங்களுடன் பகிர்ந்து கொள்ளும் புதியதொரு முயற்சியில் இறங்கியது டெப்போ சாலை யில் அமைந்துள்ள ஸ்ரீ ருத்ர காளி யம்மன் ஆலயம். கோயிலுக்கு அருகிலிருக்கும் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களின் உதவியுடன் 50 வசதி குறைந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்கள் வீட்டில் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை நேரடி யாக வழங்கும் முயற்சியில் அது நேற்று முன்தினம் ஈடுபட்டது. பொங்கல் பானை, கரண்டி, கரும்புத் துண்டுகள், பால், சர்க் கரை, வாழைப்பழம், முந்திரிப் பருப்பு என 20க்கும் மேற்பட்ட பொருட்கள் நிரம்பிய அன்பளிப்புப் பைகளை இல்லங்களுக்கு விநி யோகம் செய்யும் பணியில் 15 தொண்டூழியர்கள் பங்கேற்றனர்.
தெலுக் பிளாங்கா குடியிருப்பாளரான திருவாட்டி குணசுந்தரிக்கு பொங்கல் அன்பளிப்புப் பையை வழங்குகிறார் திரு ரா.அழகப்பன். படம்: திமத்தி டேவிட்

