அக்கம்பக்கக் குடியிருப்பு வட்டாரச் சாலைகளை முதியோருக்குப் பாது காப்பானவையாக்க புதிய வழிகள் ஆராயப்படுகின்றன. சாலைகளின் சில பகுதிகளைச் சமூகப் பரப்பாக மாற்றுவதும், இரு வழிச் சாலை களை ஒருவழிச் சாலையாக மாற்றுவதும் அவற்றுள் அடங்கும். நிலப் போக்குவரத்து ஆணை யம் இவ்விவரங்களை ஸ்ட்ரெ யிட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுடன் அண்மையில் பகிர்ந்து கொண்டது. சென்ற 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "முதியோர் பகுதி" திட்டம், முதியோருக்காகச் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் 15 இடங்களில் அமலாக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 40 கிலோமீட்டர் குறைவான வேக வரம்பு, பாத சாரிகள் "தஞ்சம்" அடைந்து படிப் படியாகச் சாலையைக் கடக்க சாலையின் நடுமத்தியில் புகலிடம், வாகனங்கள் வேகத்தைக் குறைக் கச் செய்ய சாலைக் கடப்புகளில் குறுகலான சாலைகள் போன்ற பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் இத்திட்டத்தில் உள்ளடங்கும். அண்மையில் நடத்தப்பட்ட ஏலக்குத்தகையில் ஆணையம் அடையாளம் காட்டியுள்ள பத்து இடங்களில் வாம்போ டிரைவ், அப்பர் பூன் கெங் சாலை, சாய் சீ சாலை, டெக் வாய் லேன் ஆகி யவை உள்ளடங்கும்.

