வருடாந்திர ஒன்றுகூடல்: நஜிப் இன்று சிங்கப்பூர் வருகை

1 mins read
06941fc6-e0b7-4132-9eca-943cd91564eb
-

எட்டாவது முறையாக நடைபெறும் சிங்கப்பூர்=மலேசியத் தலைவர் களின் வருடாந்திர ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் லீ சியன் லூங்கை சந்திப்பதற்காக மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் இன்று சிங்கப்பூர் வருகிறார். இரு நாட்டுத் தலைவர்களும் நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவர் என்றும் அவர்கள் முன்னிலையில் ஜோகூர் பாரு= சிங்கப்பூர் அதிவேக போக்கு வரத்து இணைப்பு (ஆர்டிஎஸ்) தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் வெளி யுறவு அமைச்சு நேற்று வெளி யிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

உள்கட்டமைப்புக்கான ஒருங் கிணைப்பு அமைச்சரும் போக்கு வரத்து அமைச்சருமான கோ பூன் வானும் மலேசிய பிரதமர் அலுவலக அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லானும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர். இரு நாடுகளை இணைக்கும் அந்தப் பெருவிரைவு ரயில் சேவை 2024ஆம் ஆண்டு இறுதி வாக்கில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோப்புப் படம்