மார்கரெட் டிரைவில் நேற்றுக் காலை எட்டு மீட்டர் உயரமுள்ள மரம் ஒன்று வேரோடு பெயர்ந்து விழுந்ததில் இரண்டு கார்களும் ஒரு விளக்குக் கம்பமும் சேதம் அடைந்தன. சிறப்புத் தேவையுடைய பிள்ளை களுக்கான ரெயின்போ சென்டர் பள்ளிக்கு அருகிலுள்ள கார் நிறுத்தப் பூங்காவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை. மரம் விழுந்ததில் வெள்ளை நிற பிஎம்டபிள்யூ காரின் முன்புறக் கண்ணாடியும் வெள்ளி நிற நிசான் காரின் கூரைப்பகுதியும் சேதமடைந்திருந்ததைப் படங்கள் காட்டின.
மரம் விழுந்ததில் பிஎம்டபிள்யூ காரின் முன்புறக் கண்ணாடியும் நிசான் காரின் கூரைப்பகுதியும் சேதமடைந்தன. படம்: லியான்ஹ சாவ்பாவ்

