சிங்கப்பூர் நாணய ஆணையம் பொதுமக்களுக்கு மின்னிலக்க நாணயத்தை வெளியிடுவதைத் தவிர்த்து வருகிறது. இவ்வாறு செய்வதில் இடர்பாடுகள் இருப்ப தாக ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் கூறினார். "இது நல்ல யோசனை என்று எனக்கு உறுதியாகத் தெரிய வில்லை. இதை நான் நிராக ரிக்கவில்லை, ஆனால் இதைச் செய்வதற்குக் காரணம் இல்லை. ஏனெனில், வங்கிகளின் இடை நிலைப் பொறுப்பு முற்றிலும் தகர்க்கப்பட்டுவிடும்," என்று திரு மேனன் நேற்று கூறினார்.
யுபிஎஸ் நிகழ்ச்சியில் பேசிய திரு மேனன், உளைச்சலான கால கட்டத்தில் மின்னிலக்க நாண யத்தை வெளியிட்டால், மக்கள் எல்லாவற்றையும் மத்திய வங்கியில் மின்னிலக்க நாணயமாகப் போட்டு வைக்க முந்துவார்கள் என்று கூறினார். இதனால், மக்கள் வங்கிகளிலிருந்து பெருமளவு பணத்தை எடுக்கும் நிலை ஏற்படும். ஆனால், வங்கி இயங்கு முறையை மேம்படுத்தும் ஒரு வழியாக மின்னிலக்க நாணயத் தைப் பயன்படுத்தும் சாத்தியத்தை மத்திய வங்கி ஆராய விரும்பு கிறது. ஆணையம் தனது "புளாக் செயின்" சோதனையின் ஒரு பகுதியாக, எந்தவித மதிப்பும் இல்லாத மின்னிலக்க நாணயத்தை வெளியிட்டது.

