2017ல் அதிக தனியார், எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் விற்பனை

2017ல் அதிக தனியார், எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் விற்பனை

1 mins read
ae0468c4-1d09-42ce-a42e-b8499388560b
-

நில மேம்பாட்டாளர்கள் 2017ல் மொத்தம் 14,707 தனியார் வீடு களையும் எக்சிகியூட்டிவ் கூட்டு ரிமை வீடுகளையும் விற்பனை செய்தனர். இது, 2016ல் விற் பனையான 11,971 வீடுகளைவிட 23 விழுக்காடு அதிகம் என நகர சீரமைப்பு வாரியம் திங்கட்கிழமை வெளியிட்ட முன்னோட்டக் கணிப்புக் காட்டுகிறது. சென்ற ஆண்டு விற் பனையான வீடுகளில் 10,682 தனியார் வீடுகள் உள்ளடங்கும். இது 2016ல் விற்பனையான 7,972 வீடுகளைவிட அதிகம்.

வாரியம் நடத்திய விற்பனை ஆய்வு, சென்ற ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளின் இறுதி விற்பனை விவரங்கள் ஆகிய வற்றின் அடிப்படையில் முன் னோட்டக் கணிப்பு வெளியிடப் பட்டது. வழக்கமாக மந்தமாக இருக் கும் டிசம்பர் மாதத்தில், 531 தனியார் வீடுகளும் எக்சி கியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளும் விற்கப்பட்டதாகக் கணிப்பு காட்டுகிறது. இது நவம்பர் மாதத்தில் விற்பனையான வீடு களைவிட 43 விழுக்காடு குறைவு. இவற்றில், 100 வீடுகள் எக்சி கியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள். நவம்பர் மாதத்தில் 149 எக்சி கியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் விற்கப்பட்டன. படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்