வீட்டு அடமானக் கடன் வட்டி விகிதங்களை வங்கிகள் 2.05 விழுக்காடு வரை உயர்த்தி இருக் கின்றன. இரண்டு மாதங்களில் இது இரண்டாவது உயர்வு. பரபரப்பான சொத்துச் சந்தையில் நிலவிவரும் ஆர்வத்தை வட்டி உயர்வு மட்டுப்படுத்தக்கூடும். அதோடு, முதலீட்டுச் சொத்து களின் வாடகை குறைந்து வரு வதாலும் வாடகைக்கு ஆள் கிடைக்காமல் காலியாக இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை அதி கரித்து வருவதாலும் கடன் எடுத்தவர்களால் செலவுகளைச் சமாளிக்க இயலாமல் போகக்கூடும் என வங்கியாளர் ஒருவர் எச்சரித்தார்.
2018 தொடங்கிய பிறகு, நிலைவிகித, நிலையற்ற விகித வீட்டுக் கடன் திட்டங்கள் இரண் டின் வட்டி விகிதங்களையும் வங்கிகள் 10 முதல் 30 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தின. டிபிஎஸ் வங்கி இப்போது மூன்று ஆண்டுகால நிலைவிகித வீட்டுக் கடன் திட்டத்தின் ஒவ் வோர் ஆண்டுக்கும் 1.95 விழுக் காடு வட்டி விதிக்கிறது. யுஓபி வங்கி மூன்று ஆண்டு கால நிலைவிகித வீட்டுக் கடன் திட்டத்தின் ஒவ்வோர் ஆண்டுக்குமான வட்டி விகிதத்தை 2.05 விழுக் காட்டுக்கு உயர்த்தியது.
ஓசிபிசி வங்கி அதன் ஈராண்டுகால நிலைவிகித வீட்டுக் கடன் திட்டத்தின் ஒவ்வோர் ஆண்டுக்குமான வட்டியை 1.75 விழுக்காட்டிலிருந்து 1.85 விழுக் காடாக உயர்த்தியது. மூன்றாவது ஆண்டுக்கான விகிதம் 1.90%. மூன்று மாதகால சைபோர் (Sibor) விகிதம் டிசம்பர் கடைசி யில் அதிகரித்து, 2018 ஜனவரி 4ஆம் தேதி 1.5 விழுக்காட்டை எட்டியது. சென்ற ஆண்டின் இரண்டாம் பாதியில் சைபோர் விகிதம் 1 முதல் 1.1 விழுக்காடாகவே இருந்தது. வீட்டுக் கடன் வட்டியை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்படும் மூன்று மாத கால சைபோர் விகிதம் ஜனவரி 12ஆம் தேதியன்று 1.3 விழுக்காட்டுக்குக் குறைந்தது.

