தோட்டக்கலையில் ஆர்வமுள்ளோருக்காக தயார்நிலையில் மேலும் ஐந்து பூங்காக்கள்

தோட்டக்கலையில் ஆர்வமுள்ளோருக்காக தயார்நிலையில் மேலும் ஐந்து பூங்காக்கள்

1 mins read
6d518311-d1b9-40c4-8cb8-b31cd0b14493
-

தோட்டக்கலையில் ஆர்வமுள் ளோருக் காக மேலும் ஐந்து பூங்காக்கள் தயாராகவுள்ளன. அவை பிடோக் நகரப் பூங்கா, சுவா சூ காங் பூங்கா, செங்காங் ரிவர்சைட் பூங்கா, யீ‌ஷூன் பூங்கா ஆகியன. தேசிய பூங்காக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தது. மேற்கூறப்பட்ட ஐந்து பூங்காக் களிலும் மொத்தம் 220 தோட்ட இடங்கள் வாடகைக்கு விடப்பட வுள்ளன. இரண்டரை மீட்டர் அகலமும் ஒரு மீட்டர் நீளமும் கொண்ட ஒரு தோட்ட இடத்திற்கு ஆண்டுக்கு $57 வாடகை செலுத்தவேண்டும்.

தோட்ட இடத்தை வாடகைக்கு எடுக்க விரும்புவோர் அடுத்த மாதம் 10ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு உங்களுக்கு வாடகைத் தோட்டம் கிடைத்தால் அதில் காய்கறிகள், அழகுச் செடிகள் போன்றவற்றை பயிரிட்டு வளர்க்கலாம். மேலும் அங் மோ கியோ டவுன் கார்டன் வெஸ்ட், ஜூரோங் லோக் கார்டன்ஸ் வெஸ்ட் ஆகிய பூங்காக்களில் இதுபோன்ற வாடகைத் தோட்டங்கள் இந்த ஆண்டின் இறுதிக்குள் தயாராகி விடும் என கழகம் தெரிவித்தது.

ஹோர்ட்பார்க் பூங்காவில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி நடந்த தோட்டத் திருவிழா நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட படம். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்