தமிழ்மொழி கற்றலை ஊக்குவிக்க புதிய இணையத்தளம் அறிமுகம்

1 mins read
e689856e-cab1-43f6-b628-bd785236bdbc
-

ப.பாலசுப்பிரமணியம்

தமிழ்ச் சமூகத்துடன் தொடர்பு களை வளர்த்துக்கொள்ளும் பல திட்டங்களில் ஒன்றாக கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு நேற்று ஒரு முக் கிய அடி எடுத்துவைத்தது. லிட்டில் இந்தியாவின் கேம்பல் லேனில் தனது www.tllpc.sg என் னும் இணையத்தளத்தை அக்குழு அறிமுகம் செய்தது. அத்துடன், தனது ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடக இணைப்பையும் அது அதி காரபூர்வமாக அறிவித்தது. லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கமும் இந்திய மரபுடைமை நிலையமும் இணைந்து இந்த அறிமுக நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கின.

இந்திய இளையர்களை மைய மாகக்கொண்டு இம்முயற்சி எடுக் கப்பட்டது என்று தமிழ்மொழி கற் றல் வளர்ச்சிக்குழுவின் செயலகத் தலைவர் திருமதி மரியா பவானி தாஸ் தெரிவித்தார். குழுவின் ஏற் பாட்டில் மாணவர்கள் பங்கேற்கும் நடவடிக்கைகள் குறித்த தகவல் களும் புகைப்படங்களும் இந்தத் தளங்களில் இடம்பெறும் என்றும் அவர் கூறினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தின ராக செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் வருகை தந்திருந்தார்.

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் இணையத்தளத்தை செம்பவாங் குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினரும் கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுத் தலைவருமான விக்ரம் நாயர் (இடமி ருந்து நான்காவது) அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார். படம்: திமத்தி டேவிட்