விண்வெளித்துறையில் ஆயிரம் வேலைகள் உருவாகும் வாய்ப்பு

விண்வெளித்துறையில் ஆயிரம் வேலைகள் உருவாகும் வாய்ப்பு

1 mins read

எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக் குள் ஆயிரம் புதிய வேலைகளை உருவாக்கக்கூடிய விண்வெளித் துறை உருமாற்றத் திட்டம் வெளி யிடப்பட்டுள்ளது. தொழில்துறை பங்காளிகள், தொழிற்சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் ஆகியவற்றுடன் கூட் டிணைந்து பல்வேறு அமைப்புகள் ஒன்றாக உருவாக்கிய விண் வெளித்துறை உருமாற்றத் திட்டம், வருங்காலத்திற்கு உகந்த விண் வெளித்துறையை உருவாக்குவதற்கான உத்திகளை வழங்கு கிறது. புதிய உருமாற்றத் திட்டத்துடன், விண்வெளித்துறையின் உற்பத்தி மதிப்பு மொத்தம் $4 பில்லியன் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலேத்தார் விண்வெளி வளாகம் 10வது ஆண்டு நிறை வைக் கொண்டாடும் வேளையில், வர்த்தகத் தொழில் அமைச்சர் (தொழில்) திரு எஸ்.ஈஸ்வரன் உருமாற்றத் திட்டத்தை நேற்று வெளியிட்டார்.