நோயாளிகளின் குடும்பத்துக்கு ஓய்வறை

1 mins read

மனநல சுகாதாரக் கழகத்தில் உள்ள இளைய நோயாளிகளின் குடும்பத்தினரும் பராமரிப்பாளர் களும் சிறு ஓய்வு எடுத்துக்கொள் வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அந்த 59 சதுர மீட்டர் பரப்பளவுள்ள ஓய்வறை நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்துவைக் கப்பட்டது.

ஓய்விடம், தேவையான எல் லாப் பொருட்களுடன் கூடிய சமையற்கூடம், சாப்பிடும் பகுதி, தொலைக்காட்சி, புத்தகங்கள், கம்பியில்லா இணையத்தொடர்பு ஆகிய வசதிகள் அந்த அறையில் இருக்கும். கழகத்தின் 'சன்ரைஸ் விங்' ஆறு வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளையும் இளையர்களையும் பராமரித்து வருகிறது. அதன் மருந்தகத்தில் ஆண்டு தோறும் 400 உள்நோயாளிகள் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும், 5,000 வெளிநோயாளி வருகைகளையும் அது கவனித்து வருகிறது.