கை மற்றும் விரல் காயங்கள் அவற்றின் துண்டிப்புக்கு இட்டுச் செல்லும். எனவே அதுபற்றிய விழிப் புணர்வை அதிகரிக்கும் நோக்கில் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் 'சேஃப் ஹேண்ட்ஸ்' என்னும் பிரசார இயக்கத்தை நேற்று தொடங்கியது. இது இம்மன்றத்தின் மூன்றாவ தும் இறுதிக்கட்டமுமான வேலை யிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரசார இயக்கமாகும். இதற்கு முன்னர் இரு கட்டங்களாக பிர சார இயக்கத்தை அது நடத்தி யது. இந்தப் புதிய பிரசார இயக்கம் கீழே விழுதல் மற்றும் வாகன விபத்துகள் தொடர்பான விழிப் புணர்வின் மீது கவனம் செலுத்தும்.
நேற்றைய பிரசார இயக்கத்தின் தொடக்க நிகழ்வில் உரைநிகழ்த் திய மனிதவள துணை அமைச்சர் சேம் டான், கடந்த உடலுறுப்பு துண்டிப்புக்கு இட்டுச் செல்லக் கூடிய காயங்கள் 2012ஆம் ஆண்டு முதல் நிலையான ஓர் எண்ணிக்கையில் தொடருவ தாகக் குறிப்பிட்டார். மாதத்திற்கு அது மாதிரியான 10 முதல் 12 சம்பவங்கள் நடப்பதாக அவர் கூறினார். கடந்த ஆண்டு 125 உடலுறுப்பு துண்டிப்புச் சம்பவங்கள் நிகழ்ந் தன. அவற்றில் 117 சம்பவங்கள் அல்லது 94 விழுக்காடு கைகள் தொடர்பானவை. "இயந்திரங்களை இயக்கு வோர் அல்லது சாதனங்களைக் கையாள்வோர் அந்த வேலை களைச் சார்ந்து இருக்கும்பட்சத் தில் உடலுறுப்புத் துண்டிப்பு நிக ழும்போது அது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதை நாம் அறிவோம்.

