அடுத்த மாதம் முதல் ஏப்ரல் வரை ஏலக்குத்தகைக்கு விடப்படும் வாகன உரிமைச் சான்றிதழ்களின் எண்ணிக்கை மாதாந்திர அடிப்படையில் 3.5% குறையும். அதாவது 6,108 கார் ஒதுக்கீடு 5,894 ஆகக் குறையும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், சிஓஇ விநியோகம் மாதத்துக்கு 8,635 என்ற எண்ணிக்கையிலிருந்து 8,544 ஆகக் குறை யும். 1,600 சிசிக்கு உட்பட்ட கார்களின் விநியோகம் குறைக்கப்படுவதே அதற்குக் காரணம் என்று சொல்லப்படு கிறது. அந்தப் பிரிவில் சிஓஇ ஒதுக்கீடு 3,360லிருந்து 3,115க்குக் குறைகிறது. பொதுப் பிரிவின் வாகனங்கள் ஒதுக்கீடு 1,025லிருந்து 1,132க்கு உயர்கிறது. மோட்டார் சைக்கிள்களுக்கான ஒதுக் கீடு 1,017லிருந்து 1,025க்கு உயர்கிறது. வர்த்தக வாகனங் களுக்கான ஒதுக்கீடு 485லிருந்து 493க்கு உயர்கிறது.
கார்களுக்கான 'சிஓஇ' ஒதுக்கீடு பிப்ரவரி முதல் 3.5% குறைகிறது
1 mins read

