சிங்கப்பூரில் ஆண்டுதோறும் கழிவுகளாகக் கைவிடப்படும் கணினிகள், தொலைக்காட்சி கள், துணி துவைக்கும் இயந் திரங்கள், இதர வீட்டு உபயோக மின்னியல் சாதனங்கள் போன்ற சுமார் 30,000 டன் எடையுள்ள மின்னியல் கழிவுகளில் வெறும் 6% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவதாக தேசிய சுற்றுப் புற வாரியம் மேற்கொண்ட பயனீட்டாளர் ஆய்வு தெரிவிக் கிறது. அத்தகைய கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு ஏற்ற வழிமுறைகளைக் கொண்டிருக் கும் சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரில் மின்னியல் கழிவு களை மறுசுழற்சி செய்வது மிகவும் குறைவு.
ஐரோப்பிய ஆணையம் வெளியிட்ட 'யூரோஸ்டாட்' தகவலின்படி, 2015ஆம் ஆண்டு சுவீடனில் 52%, டென்மார்க்கில் 43% மின்னியல் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன. தேசிய சுற்றுப்புற வாரியம் மின்னியல் கழிவு மறுசுழற்சி தொடர்பான ஆய்வை 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் வரை மேற்கொண்டது. மின்னியல் கழிவுகளை நிர்வகிப் பதில் எதிர்கொள்ளும் சவால் களை அடையாளம் காணுதல், அவற்றைச் சமாளிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவது ஆகியன ஆய்வின் நோக்கம்.

