தான் வேலை செய்யும் வீட்டின் பின்புற சன்னலில் இருந்து பொருட்களைக் கீழே வீசி எறிந்த 31 வயது இந்தோனீசியப் பணிப்பெண் (படம்) கைது செய்யப் பட்டுள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு அங் மோ கியோ அவென்யூ 9, புளோக் 623ல் உள்ள இரண்டாம் மாடி வீட்டிலிருந்து அந்தப் பணிப்பெண் சக்கர நாற்காலி உட்பட பலவிதமான பொருட்களை ஒவ்வொன்றாக வீசி எறிந்ததாக போலிஸ் தெரிவித்தது. இணையத்தில் பரவிய காணொளியில், அந்தப் பெண் 'குக்கர்', மின்சாரச் சாதனங்கள், சமைலறைப் பொருட்கள், உடைகள் போன்ற பலவற்றை வீசியதையும் அவை புளோக்கின் அடியில் சிதறிக் கிடந்ததையும் அதில் பார்க்க முடிந்தது. அப்போது புளோக்கின் அடித்தளத்தில் 'பொக்கிமோன்' விளையாட்டில் ஈடுபட்டிருந்த குடியிருப்பா ளர்களும் பணிப்பெண்ணின் செயலைப் பார்த்தனர் என்றும் அவர்கள் போலிசை அழைத்தனர் என்றும் அறியப்படுகிறது. அந்தப் பணிப்பெண் கடந்த ஒரு மாதமாக தனது வீட்டில் வேலை செய்கிறார் என்று அவரது முதலாளியான 60 வயது திருவாட்டி லின் சொன்னார். போலிஸ் விசாரணை தொடர்கிறது.
வீட்டுச் சன்னலிலிருந்து பொருட்களை வீசி எறிந்த பணிப்பெண்
1 mins read
-

